திங்கள், 15 பிப்ரவரி, 2016

காதல் பயிற்சி.......


புல்வெளி பனித்துளி 
ரசிக்க கற்றுக்கொடுத்தாய்..... 

கவிதைகள் படைக்கும் தமிழ் 
படிக்க தூண்டினாய்.. 

வீணை சிந்தும் ராகம் 
செவிமடுக்க செய்தாய்... 

வண்ணங்கள் ஏந்தும் ஓவியம் 
பார்க்க பழக்கினாய்... 

மஞ்சள் மாலை 
கடற்கரை காற்று 
புதிதாய் உணர்த்தினாய்....... 

இரவு உணவகம் 
பெயர் புரியா உணவு 
சுவைத்து புசிக்க செய்தாய்.... 

பிஞ்சு மழலை 
கொஞ்சும் மொழி 
அன்புறுதலின் அர்த்தம் அளித்தாய்... 

அத்தனை செய்தும் 
அமைதியாய் இருந்தாய் 

சொல்லி தராமலே 
உன்னை காதலிப்பேன் என்று தெரிந்து தானோ.....!

                                        ---------------பாரதிசரண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக