எங்கிருந்து எழுகிறது துயரத்தின் மணம்
வாய்ப்புகள் மறுத்து திரும்பும் கால் மறைக்கும் காலுறையில்
புழங்கும் வியர்வை
கையறு நிலையின் கைகளில் புகைந்து கருகும்
சிகரெட் கனல்
பசி வயிறை உண்டு செரித்து பின், மீந்து போன சோற்று பொட்டலத்தில்
காத்திருக்கும் ஊசிய உணவு
எல்லா ஏமாற்றத்தின் அலைச்சலுக்கும் , தாகம் தணிக்க
மீதமிருக்கும் கடைசி கோப்பை மதுவின்
புளித்த வாடை.
கடற்கரையின் மணலில் எண்ணங்களற்று
வெறுமையாய் அமர்ந்திருக்கும்போது
பழிதீர்க்கும் கொலைவாலின் நுனியிலிருந்து
பொங்கி அலைபாயும் செவ்வாழியிலிருந்து
கவிந்து வருகிறது துயரத்தின் குருதி மணம்..
------------------------பாரதிசரண்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக